Saturday 25 February 2012

சத்தியத்திற்கு ஒரு சோதனை


சத்தியத்திற்கு ஒரு சோதனை

கம்யூனிசம், பாசிசம், கேப்பிட்டலிச தத்துவங்கள் போல் காந்தியின் தத்துவங்கள் ‘காந்தியம்’ ஆக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான பல்கலைகழகங்களிலும் Gandhian Thoughts ஒரு பாடமாக வைக்கப்பட்டு இளங்கலை முதுகலை பட்டங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த தத்துவங்கள் எந்த அளவு உலக நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளது , இந்த பாடத்திட்டத்தை நடத்தும் இந்திய அரசும் மக்களும் இன்று எப்படி இதை கடைபிடிக்கிறார்கள். ஒரு மதிப்பீடு.
கொள்கை 1 : சுவதேசி
காந்தியக் கொள்கையிலேயே ‘ரொம்ப நகைச்சுவையாய்’ போனது இந்த கொள்கை தான்.  காந்தி இன்றிருந்தால் இந்தியாவின் கதவை திறந்துவிட்ட காங்கிரசைப் பார்த்து ‘என்ன வெச்சு காமெடி கீமடி பண்லேயே’ என்று கேட்டிருப்பார். கோக கோலா முதல் உருளைக்கிழக்கு சிப்ஸ் வரை அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறோம். உலகமயமாக்கலில் காந்தியின் பொருளாதரம் காற்றில் பறந்து கால் நூற்றாண்டு ஆகப்போகிறது.
கொள்கை 2 :  மதுவிலக்கு
மதுவிலக்கு அமல்..ரத்து என்ற வசனங்கள் எல்லாம் மாறிப்போய் மதுக்கடைகளை அரசே நடத்தும் காலம் இது.  தமிழகத்தில் வீட்டுக்கு ஒரு வண்ண தொலைக்காட்சி பெட்டியும் ஒரு குடிகாரனும் கட்டாயம் உண்டு. இரண்டுக்கும் உபயம் தமிழக அரசு. இந்தியாவில் மதுவிலக்கு எந்த மாநிலத்திலும் அமலில் இல்லை என்பது நிதர்சனம்.
கொள்கை 3 :  மாமிசம் உண்ணாமை
பசு வதை மிகப்பெரிய பாவமாக பார்க்கப்பட்ட நாட்கள் போய், இன்று பட்டிதொட்டி யெங்கும் பீப் பிரியாணி கடைகள் பட்டையை கிளப்புகின்றன்.  கோயிலுக்குள்ளேயே கோழி, ஆடு பலியிடுவதை தடைசெய்ய முடியவில்லை. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை.
கொள்கை 4 : அகிம்சை
உலகமே குறுக்கே நின்றபோதிலும் கடத்தல் வழியிலாவது செய்தே தீருவோம் என்று அனுகுண்டு செய்து வைத்திருக்கிறது  இந்திய அரசு. உலகத்தின் தேவை அப்படி. பிறநாடுகளை விட்டுவிடுங்கள். உள்நாட்டிலேயே வாழ்வாதாரம் தேடி போராடும் நக்சல்களை நசுக்கவும் ஆயுதம் இன்றி அரசால் போராட முடியவில்லை.
கொள்கை 5 : மதசார்பின்மை
காந்தியின் மதசார்பின்மை வித்யாசமானது. ஜின்னாவை முதல் முறை சந்திக்கும் போதே ‘ஒரு முஸ்லீம் தலைவரை சந்திப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று அவருக்கு மத முத்திரை இடுகிறார்.  எப்போதும் முஸ்லீம்களையும் இந்துக்களையும் வேறுபடுத்தி அடையாளப்படுத்துகிறார். ஆனால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிறார்.  இதே சவசவ மதசார்பின்மையை தான் இந்திய அரசும் வழி தொடர்கிறது. காந்தி பிறந்த குஜராத்திலேயே ரத்தம் கொட்டிக்கொண்டே இருக்கிறது. மதச்சார்பின்மை என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரசும் ஆரம்ப காலம் முதல் முஸ்லீம் லீக் கட்சியிடன் கூட்டணி வைத்துக்கொள்கிறது.
கொள்கை 6 : சாதி மறுப்பு
இதிலும் மதசார்பின்மை பாணியில் சாதிகளை அடையாளப்படத்திவிட்டு பின் அவர்களை ஒற்றுமையாக வாழ வைக்க முயல்கிறார் காந்தி.  ஹரிஜன்ஸ் என தாழ்த்தபட்டவர்களுக்கு அவர் வைத்த அடையாள பெயரை அவர்களே இன்று ரசிக்கவில்லை. தலித் இயக்கம், தாழ்த்தப்பட்டவர்கள் இயக்கம் என்பதே அவர்களை குறிக்கும் சரியன இடுசொல்லாக இருக்கிறது.  காங்கிரஸ் கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் அந்த பகுதியில் அதிகமாக உள்ள சாதியினர் யார் என்பதை கொண்டே வேட்பாளரை அறிவிக்கின்றது. சாதிக்கட்சிகளுடன் கூட்டணியும் வைக்கிறது.  தேர்தல் முதல் வேலை வரை அம்பேத்கரும், பெரியாரும் விதித்த இடஒதுக்கீடு முறையே உண்மையான சமுகநீதி மாற்றத்திற்கு காரணமாக இருக்கிறது.
உலக நடைமுறையில் காந்தியம் சுத்தமாக தோல்வியடைந்துள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகிவிட்டது.
காந்தியமும் கடவுள் போல் தான். இருந்தா நல்லாயிருக்கும் .. ஆனா இல்லையே !!
கடவுள்-காந்தி இருவரும் அவர்கள் பெயரைச் சொல்லி சிலர் பிழைப்பு நடத்துவதர்க்குத்தான் பயண்படுகிறார்கள்.